ரஜினிக்கும் எனக்கும் பல முரண்பாடுகள் ஆனால்.. பாரதிராஜா சொன்ன ஷாக்கிங் விஷயம்
ரஜினிகாந்த்
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக, ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் வெளிவந்த வேட்டையன் படம் மாபெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், தற்போது இவர் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து, ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார்.
ஷாக்கிங் விஷயம்
இந்நிலையில், ரஜினிகாந்த் பற்றி பாரதிராஜா அவருடைய 70ஆவது பிறந்தநாள் விழாவில் பேசிய விஷயம் திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது.
அதில், "நான் இங்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்காக வரவில்லை. ஒரு சூப்பர் மனிதரான ரஜினிக்காக வந்திருக்கிறேன். ரஜினிகாந்த் ஒரு சிறுவனைக்கூட தரக்குறைவாக பேசியதே இல்லை.
கோபத்தில் கூட அடுத்தவரை காயப்படுத்தமாட்டார். ரஜினிக்கும் எனக்கும் பல முரண்பாடுகள் வந்திருகின்றன. பலமுறை அவரை நான் தாக்கி பேசியிருக்கிறேன். ஆனால், இது எதையும் அவர் மனதில் வைத்து கொண்டது இல்லை" என்று தெரிவித்துள்ளார்.