ஐசியூ பிரிவில் ரஜினிகாந்த்.. மருத்துவமனை வெளியிட்ட புது தகவல்
ரஜினிகாந்த்
சினிமாவில் முன்னணி நடிகராக 73 வயதை எட்டியும் தற்போது இருக்கும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக பல படங்களில் பிஸியாக நடித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.
தற்போது இவர் நடிப்பில் வேட்டையன் படம் வரும் 10 - ம் தேதி வெளிவர உள்ளது. அதை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார் என தகவல் வெளியானது.
ஐசியூ பிரிவில் ரஜினிகாந்த்
அவருக்கு அடிவயிற்றில் ஸ்டெண்ட் பொறுத்தப்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சை சற்று நேரத்திற்கு முன் மேற்கொள்ளப்பட்டு அவர் ஐசியூ-வில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
24 மணி நேரத்திற்கு ரஜினிகாந்த் ஐசியூ பிரிவில் இருப்பார் எனவும், அதன் பின் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும், தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் எனவும் மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
