மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் ரஜினிகாந்த்.. வெளிவந்த வீடியோ..
மருத்துவமனையில் ரஜினி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரத்தநாளத்தில் ஏற்பட்டு இருந்த வீக்கத்தை சரிசெய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்திற்கு அக்டோபர் 1ஆம் தேதி சிகிச்சை நடந்து ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.
டிஸ்சார்ஜ்
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் "ரஜினிகாந்த் 30 செப்டம்பர் 2024 அன்று கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் இருந்து பிரியும் இரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இருதயநோய் நிபுணர் டாக்டர். சாய் சதீஷ் பெருநாடியில் ஒரு ஸ்டென்டை வைத்து வீக்கத்தை முழுவதுமாக நீக்கினார். அதனால் அறுவை சிகிச்சை இல்லாமல் அதை சரி செய்துவிட்டோம். திட்டமிட்டபடி சிகிச்சை நிறைவு பெற்றது. இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்பவுள்ளார்".
சிகிச்சை நல்லபடியாக முடிந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நலமுடன் வீடு திரும்பியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இதோ..
#SuperstarRajinikanth சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் 👍
— Prakash Mahadevan (@PrakashMahadev) October 4, 2024
pic.twitter.com/kZ1YMCrTmP

குழந்தையின் டயப்பர், சிந்திய சிறுநீர் பை; விமானத்தில் அருவருப்பு விஷயம் - பணிப்பெண் ஆதங்கம் IBC Tamilnadu

SBI JanNivesh SIP முதலீட்டு திட்டம்.., குறைந்தபட்சமாக ரூ.250 முதலீடு செய்து ரூ.7 லட்சம் பெறலாம் News Lankasri
