ரஜினியின் கூலி படத்தை பார்த்த பிரபலம்... முதன்முறையாக வந்த விமர்சனம்
லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இளம் இயக்குனர்களில் ஒருவர்.
மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர் என வெற்றிப் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து வெளியாகப்போகும் படம் தான் கூலி.
ரஜினி, நாகர்ஜுனா, உபேந்திரா சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
விமர்சனம்
ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் ரஜினியின் கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.
தற்போது இப்படத்தின் முதல் பாகத்தை நடிகர் ரஜினி பார்த்துள்ளாராம், படம் அமோகமாக வந்திருக்கிறது என தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளாராம்.