கூலி படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. படம் எப்படி வந்திருக்கு தெரியுமா
கூலி
லியோ படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.
நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, ஷோபின் ஷபீர் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாகிறது.

இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த கிலிம்ப்ஸ் வீடியோ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக படத்தின் முதல் பாடல் வெளிவரவுள்ளது. இந்த முதல் பாடலை டி. ராஜேந்தர் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளதாக கூறப்படுகிறது.
படத்தை பார்த்த ரஜினி
இந்த நிலையில், கூலி திரைப்படத்தின் முதல் பாதியை சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்துவிட்டாராம்.

படம் முதல் பாதி வரை சிறப்பாக வந்துள்ளதால் அவர் மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri