Kgf 2 படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த்- என்ன செய்துள்ளார் தெரியுமா?
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 14ம் தேதி வெளியான திரைப்படம் Kgf 2. முதல் பாகத்தின் வெற்றி இரண்டாம் பாகத்திற்கு பெரிய வரவேற்பை கொடுத்தது.
யஷ் நடித்த Kgf இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி இருந்தது, எல்லா இடத்திலும் படத்திற்கு நல்ல வசூல் மழை தான்.
அதிலும் தமிழகத்தில் பீஸ்ட் படத்தை தாண்டி Kgf 2 படத்திற்கு இப்போது அதிக திரையரங்குகள் கிடைத்து வருவதால் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Kgf 2 படம் பார்த்த ரஜினிகாந்த்
நடிகர் ரஜினி நல்ல படங்களை பார்த்து அந்த கலைஞர்களை பாராட்டுவது வழக்கம். அதேபோல் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் பார்த்த ரஜினிகாந்த் இப்போது Kgf 2 படத்தையும் பார்த்துள்ளார்.
பின் Kgf 2 பட தயாரிப்பாளரை போனில் தொடர்பு கொண்டு படக்குழுவினருக்கு நல்ல பாராட்டை கொடுத்துள்ளார்.
அடுத்தடுத்து பாதியிலேயே நிறுத்தப்பட்ட தொடர்கள்- நடிகை சரண்யாவின் அடுத்த அதிரடி