மயில்சாமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்.. கடைசி ஆசையை நிறைவேற்றுவாரா
மயில்சாமி
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று உடல்நல குறைவு காரணமாக காலமானார்.

அவருடைய உடலுக்கு திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கங்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இன்று ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ரஜினி உருக்கம்
இதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், 'என்னுடைய நெருங்கிய நண்பர் மயில்சாமி. அவர் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றிருந்த போது எனக்கு மூன்று முறை போன் செய்தார்’.

’என்னால் எடுக்க முடியாமல் போனதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று இருந்தேன். அதற்குள் மறைந்துவிட்டார். சிவன் கோவிலில் நான் பாலபிஷேகம் செய்யவேண்டும் என்ற அவருடைய கடைசி ஆசையை நான் நிறைவேற்றுவேன்' என்று பேசியுள்ளார் ரஜினிகாந்த்.
மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல்.. கண்கலங்க வைக்கும் புகைப்படம்
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri