அது நடந்தால் ரஜினி உடனே ரூ.1 கோடி கொடுப்பார்: லதா ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தற்போது அமைப்பு தொடங்கி நடத்தி வருகிறார். அதன் நிகழ்ச்சி இன்று நடந்த நிலையில் அதில் பேசிய லதா ஒரு முக்கிய விஷயத்தை கூறி இருக்கிறார்.
நீண்ட காலமாக நீடித்து வரும் காவிரி நதிநீர் பிரச்சனை பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். '2002லேயே ரஜினி நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறினார். அதை உங்கள் இயக்கம் மூலம் தர வாய்ப்பு இருக்கிறதா.. அதற்காக உங்கள் இயக்கம் வலியுறுத்துமா?' என கேட்கப்பட்டது.

தொடங்கினால் உடனே தருவார்
நதிகள் இணைப்பு திட்டம் தொடங்கினால் அடுத்த நிமிடமே ரஜினி ஒரு கோடி ரூபாய் கொடுப்பார் என லதா தெரிவித்து உள்ளார்.
மேலும் உங்கள் இயக்கத்துக்கு ரஜினி ஆதரவு எவ்வளவு இருக்கிறது என கேட்டதற்கு. "அது குடும்பத்திற்குள் நடக்கும் private விஷயம். அதை எல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது" என பதில் கூறி இருக்கிறார்.