சிம்பு, வெங்கட் பிரபுவை வாழ்த்திய கையோடு மற்றொரு பிரபலத்தை பாராட்டிய ரஜினி- என்ன சொல்லியிருக்கார் பாருங்க
நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் பெரிய பிரச்சனைகளை கடந்து வெளியாகி இருக்கிறது.
இரண்டு நாள் முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் படம் ரூ. 14 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
சிம்பு-வெங்கட் பிரபுவின் முதல் கூட்டணி, உடல் எடை குறைத்த பின் சிம்பு நடித்துள்ள படம், யுவன் இசை, டைம் லூப் என படத்தை கொண்டாட நிறைய விஷயங்கள் இருக்கிறது.
படத்தை பார்த்த ரசிகர்களும் விமர்சனங்களை நல்ல விதமாக தான் கூறுகிறார்கள். பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்து பாராட்ட நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சிம்பு மற்றும் வெங்கட் பிரபுவை பாராட்டி இருக்கிறார்.
இப்படத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவிற்கும் ரஜினி போன் செய்து பாராட்டியுள்ளார். அவர் வாழ்த்திய விஷயத்தை மிகவும் சந்தோஷமாக தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா.
Today I feel that I got the greatest award for my acting skill ??? got a call from our SUPER STAR @rajinikanth sir ???????? “SIR, U Made My decade sir ????????????Ur kind appreciation giving me a great strength to face this journey ???????sjsuryah
— S J Suryah (@iam_SJSuryah) November 27, 2021