அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்.. இதோ
குட் பேட் அக்லி
நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர்.
த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சிறப்பு காட்சிகள் முடிந்து இப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.
தரமான சம்பவம் குட் பேட் அக்லி என கூறி வருகின்றனர். குட் பேட் அக்லி திரைப்படம் வெற்றிபெறவேண்டும் என திரையுலக நட்சத்திரங்கள் பலரும் நேற்றில் இருந்து வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
ரஜினிகாந்த் வாழ்த்து
இந்த நிலையில், இன்று காலை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் குட் பேட் அக்லி ரிலீஸ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், "படம் வெற்றிபெற வாழ்த்துக்கள், God Bless you" என கூறினார்.