பிரபல நடிகரின் படம் வெளியீடு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
புதிய திரைப்படங்கள்
இந்த வாரம் இந்தியளவில் பல முன்னணி நட்சத்திரங்கள் படங்கள் வெளியாகியுள்ளது. நேற்று விஜய்யின் லியோ தமிழ் சினிமாவில் இருந்து வெளிவந்தது.
தெலுங்கில் இருந்து பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி, ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வர் ராவ் ஆகிய படங்கள் வெளிவந்தன.
இந்த படங்களை தொடர்ந்து இன்று பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் நடிப்பில் உருவாகியுள்ள கணபத் திரைப்படம் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் வாழ்த்து
இந்நிலையில், டைகர் ஷெராப்பின் கணபத் திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது நண்பன் ஜாக்கி ஷெராப்பின் மகன் டைகர் ஷெராப் என்பதால் மனமார்ந்த வாழ்த்து கூறி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரஜினியை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும் கணபத் படத்திற்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து பதிவுகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த பதிவு..
My hearty wishes to @iTIGERSHROFF and the entire cast and crew of #Ganapath. All the very best to you and wishing the film a grand success.#tigershroff #ganapath #jackieshroff @bindasbhidu
— Rajinikanth (@rajinikanth) October 20, 2023
My best wishes to dear @itigershroff and the entire cast and crew of #Ganapath a massive success, it’s gonna be a blast ?❤️ @bindasbhidu ?
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) October 20, 2023