லியோ படத்திற்காக ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு
விஜய்யின் லியோ
தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகிற 19ம் தேதி உலகளவில் பிரமாண்டமாக வெளியாகிறது.
இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மாபெரும் அளவில் இருப்பதால் கண்டிப்பாக வசூல் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் பேச்சு
இந்நிலையில் விஜய் நடித்துள்ள லியோ படம் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார் ரஜினிகாந்த். தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பில் பத்திரிகையாளரிடம் பேசிய ரஜினிகாந்த் லியோ படம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
இதில் 'லியோ படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும். லியோ வெற்றியடைய நான் ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்' என கூறினார். லியோ படம் குறித்து ரஜினியின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.
மேலும், லியோ படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 171வது படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.