விமானத்தில் சூப்பர்ஸ்டாரை சந்தித்த சூரரை போற்று கதாநாயகி.. என்ன செய்தார் தெரியுமா
கடந்த 2020ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் சூரரை போற்று. சூர்யா கதாநாயனாக நடித்திருந்த இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.
அபர்ணா பாலமுரளி
மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடித்து அனைவரும் கவர்ந்தார். இப்படத்திற்கு முன் வெளிவந்த 8 தோட்டாக்கள் திரைப்படம் தான் நடிகை அபர்ணா பாலமுரளியின் முதல் தமிழ் திரைப்படமாகும்.
இதன்பின் தான சர்வம் தாளமயம், சூரரை போற்று, நித்தம் ஒரு வானம் என தமிழில் தொடர்ந்து நடிக்க துவங்கினார். ஆனால், மலையாளத்தில் பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விமானத்தில் ரஜினியுடன்
இந்நிலையில், நடிகை அபர்ணா பாலமுரளி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விமான பயணத்தின் போது கொச்சியில் சந்தித்துள்ளனர். அப்போது ரஜினிகாந்துடன் அபர்ணா எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ஜெயிலர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக தற்போது கொச்சிக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
