ரஜினியின் ஆதரவு இந்த கட்சிக்கு தானாம்! அதிர வைத்த அரசியல் பிரமுகர்! நடப்பது என்ன?
பல எதிர்பார்ப்புகளுக்கு இடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியானது. டிசம்பர் 31 ல் கட்சி தொடங்கும் நாளை அறிவிக்கப்போவதாகவும், எம்.ஜி.ஆரின் பிறந்த நாளன்று கட்சி தொடங்கவுள்ளதாகவும், டிசம்பர் 30 ல் மதுரைக்கு வருகை தருவதாகவும் கூறியிருந்தார்.
தீவிர நம்பிக்கையுடன் அவரின் ரஜினி மக்கள் இயக்கம் வாயிலாக கட்சி பணியாற்றிக்கொண்டிருந்த அனைவருக்கும் அவர் தற்போது எடுத்துள்ள முடிவு பேரதிர்ச்சியே.
அண்மையில் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற அவர் அப்படப்பில் சிலருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது உறுதியானதால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு உடனே கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என உறுதியான நிலையிலும், மீண்டும் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்தி நோய் அறிகுறி இல்லை என்றாலும் கொரோனா பரவும் சூழலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் கூறியதால் கட்சி தொடங்குவது குறித்து அதிரடியாக தன் முடிவை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் நல்லவர்களுக்கு ஆதரவு தரவேண்டும் என அரசியல் பிரமுகர்கள் கூறி வரும் நேரத்தில் ரஜினி எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால் அது அதிமுகவுக்குத்தான் இருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.