9 ஆண்டுகளுக்கு பின் ரீ ரிலீஸாகும் சிவகார்த்திகேயனின் சூப்பர்ஹிட் படம்.. எப்போது தெரியுமா
ரஜினிமுருகன்
முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளிவந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணி மீண்டும் 2016ல் ரஜினிமுருகன் படத்தில் இணைந்தனர். இப்படமும் ப்ளாக் பஸ்டர் வெற்றியை தேடி வந்தது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, சூரி நகைச்சுவை கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார்.
சிவகார்த்திகேயன் - சூரி கம்போ வேற லெவலில் இருக்கும் என்று தான் சொல்லவேண்டும். மேலும் ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ரீ ரிலீஸ்
சமீபகாலமாக ரீ ரிலீஸ் கலாச்சாரம் பெரிதாகி வரும் நிலையில், ரஜினி முருகன் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.
வருகிற மார்ச் மாதம் ரஜினிமுருகன் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகிறது என அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை மீண்டும் திரையில் கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Re-releasing In March #Rajinimurugan pic.twitter.com/RM5rxL6daH
— Thirrupathi Brothers (@ThirrupathiBros) February 15, 2025

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர்களை நடுநடுங்க வைத்த சம்பவம்... அட்டகாசமான ப்ரொமோ காட்சி Manithan
