அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..! தள்ளி போன தளபதி 65 படத்தின் வெளியீடு..
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் புரிந்து வருகிறது.
மேலும் இவர் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தில் பணிபுரிந்து வந்த ஒரு சிலருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால், இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதெராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். பின்னர் மருத்துவர்களின் அறிவுரையின் படி மீண்டும் வீடு திரும்பினார் ரஜினி.
இந்நிலையில் தற்போது அண்ணாத்த திரைப்படம் 04.11.2021 தீபாவளி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தளபதி 65 படமும் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளாதால், தளபதி 65 வெளியாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
#Annaatthe will be releasing on November 4th, 2021!
— Sun Pictures (@sunpictures) January 25, 2021
Get ready for #AnnaattheDeepavali! @rajinikanth @directorsiva @KeerthyOfficial @immancomposer pic.twitter.com/NwdrvtVtSE