சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் தல அஜித்தின் மனைவி ஷாலினி வாங்கிய பரிசு, இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்..
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் புரிந்து வருகிறது.
மேலும் இவர் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தில் பணிபுரிந்து வந்த ஒரு சிலருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால், இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதெராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
பின்னர் மருத்துவர்களின் அறிவுரையின் படி மீண்டும் வீடு திரும்பினார் ரஜினி. இந்நிலையில் தொடர்ந்து ரஜினியின் அரிய புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது தல அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி சிறு வயதில் ரஜினியிடம் பரிசு வாங்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
மேலும் இவர்கள் இருவரும் 1989 ஆம் ஆண்டு வெளியான ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.