கர்ணன் படத்தை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் நடிகை ரஜிஷா விஜயன், யாருடன் தெரியுமா?

surya karnan rajisha vijayan
By Jeeva May 03, 2021 07:40 AM GMT
Report

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் கர்ணன், இப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

 மேலும் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ரஜிஷா விஜயன், மலையாள நடிகையான ரஜிஷா விஜயன் தனது முதல் படத்திலே தமிழ் ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.

இந்நிலையில் கூட்டத்தில் ஒருத்தன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் Surya39 படத்தில் ரஜிஷா விஜயன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் ரஜிஷா விஜயன் அடுத்ததாக நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் ஒப்பந்தமாகி வரும் ரஜிஷா விஜயன் தமிழ் முன்னணி நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US