உடல் எடையை பாதியாக குறைத்து ஆளே மாறிய தனுஷ் பட நடிகை ரஜிஷா விஜயன்.. புகைப்படம் இதோ
ரஜிஷா விஜயன்
மலையத்தில் வெளியான அனுராக கரிக்கின் வெள்ளம் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, இப்படத்திற்காக சிறந்த நடிகை என்று விருதையும் வென்றவர் நடிகை ரஜிஷா விஜயன்.
இவர் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கால்பதித்தார். இப்படத்தை தொடர்ந்து கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்திருந்தார்.
மேலும் தற்போது சர்தார் 2 மற்றும் துருவ் விக்ரமின் பைசன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் கலக்கிக்கொண்டிருந்த நடிகைகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் எடையை குறைத்து நடிகை
இந்த நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ரஜிஷா விஜயன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வேறு ஒன்றுமில்லை, உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருக்கும் புகைப்படத்தை தான் ரஜிஷா வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அட ரஜிஷா விஜயனா இது ஆளே மாறிவிட்டாரே என கூறி வருகிறார்கள். அந்த அளவிற்கு உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை பாருங்க..
