ராஜ்கிரணின் மகளை திருமணம் செய்து கொள்ளும் நாதஸ்வரம் சீரியல் நடிகர் ! ஃபேஸ்புக் மூலம் காதல்
முனீஸ்ராஜா
பிரபல சன்-டிவி தொலைக்காட்சி திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான மெகா தொடர் நாதஸ்வரம். அதில் சம்பந்தம் என்ற கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் முனீஸ்ராஜா. நடிகர் சண்முகராஜனின் உடன் பிறந்த தம்பி இவர்.
நாதஸ்வரம் தொடரின் மூலம் பெரியளவில் பிரபலமான நடிகர் முனீஸ்ராஜா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் என்ற தொடரிலும் ஹீரோவாக நடித்திருந்தார். சினிமாவிலும் திரைப்படங்களில் நடித்துள்ள முனீஸ்ராஜா சட்டசபைத் தேர்தலில் பழனி தொகுதியில் சுயேச்சை உறுப்பினராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
ராஜ்கிரண் மகள்
இதனிடையே ராஜ்கிரணின் மகள் ஜீனத் பிரியாவும் முனீஸ்ராஜாவும் காதலித்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் இரண்டு பேர் வீட்டிலும் சில காரணங்களால் இவர்கள் காதலை ஏற்கவில்லை. ஆனால் தற்போது முனீஸ்ராஜாவின் வீட்டிலில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்களாம்.
மேலும் ராஜ்கிரண் வீட்டிலும் மகளின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்து விட்டார்களாம். அவரின் அம்மா மட்டும் இன்னும் சமாதானம் ஆகவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவர்களின் காதல் ஃபேஸ்புக் மூலம் மலர்ந்ததாக முனீஸ்ராஜா தெரிவித்து இருக்கிறார்.
வாரிசு பட ஷூட்டிங்கில் இருந்து நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட போட்டோ

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
