அவர் ராஜ்கிரண் மகள் இல்லை, அவரது மனைவி பெற்ற மகள்.. பிரியா முனிஷ்ராஜா
நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா பிரபல சின்னத்திரை நடிகர் முனிஷ் ராஜா என்பவரை ரகசிய திருமணம் செய்துகொண்டார். காதலுக்கு வீட்டில் ஒப்புதல் இல்லை என்பதால் அவர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டார்.
"அவர் என் மகளே இல்லை, வளர்ப்பு மகள் தான்" என ராஜ்கிரண் அறிக்கை வெளியிட்டு இருந்தது உங்களுக்கு நினைவிருக்கும்.
இந்நிலையில் தற்போது ராஜ்கிரணின் மனைவி போலீசில் புகார் அளித்து இருக்கிறார். முனீஷ்ராஜா தரப்பு பணம் கேட்டு தொல்லை செய்வதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

ராஜ்கிரண் மனைவி பெற்ற மகள்..
அது பற்றி பேசி இருக்கும் முனிஸ்ராஜா, 'பிரியா ராஜ்கிரணின் மகள் இல்லை, தற்போது அவரது மனைவியாக இருக்கும் பத்மஜாவுக்கும் இன்னொருவருக்கும் பிறந்த குழந்தை. பிரியா குழந்தையாக இருக்கும்போதே ராஜ்கிரணுடன் அவர் வாழ தொடங்கி இருக்கிறார்' என தெரிவித்து இருக்கிறார்.
மேலும் ப்ரியா பேசும்போது "எனது நகைகள் அந்த வீட்டில் இருக்கிறது, அது என் அப்பா எனக்கு கொடுத்தது. அதை கேட்டதற்கு தற்போது பொய் புகார் அளித்து இருக்கிறார். இது பற்றி மீடியாவை சந்திக்க போகிறேன்" என தெரிவித்து இருக்கிறார்.

ஹீரோயின் ஆன பிக் பாஸ் சுருதி! படத்தில் அடையாளமே தெரியலையே
இத்தாலியில் 2,700 ஆண்டுகள் பழமையான எட்ரஸ்கன் சமாதி - தங்கம், அரிய உபகரணங்கள் கண்டுபிடிப்பு News Lankasri