முகுந்த் வரதராஜன் ஜாதி மறைக்கப்பட்டதாக சர்ச்சை.. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பதிலடி
அமரன் படம் ஒருபக்கம் தியேட்டர்களில் நல்ல வசூலை குவித்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த படம் பற்றி ஒரு சர்ச்சையும் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வருகிறது.
மேஜர் முகுந்த் வரதராஜன் ஜாதி பின்னணி பற்றி வேண்டுமென்றே மறைத்துவிட்டார்கள், ஆனால் மனைவி இந்துவின் பின்னணியை தெளிவாக காட்டி இருக்கிறார்கள் என ஒரு சிலர் விமர்சித்து இருந்தனர். நடிகை கஸ்தூரி உட்பட பலரும் இதை பற்றி பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் விளக்கம்
இந்நிலையில் அமரன் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய இயக்குனர் சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
முகுந்த் வரதராஜனை தமிழன் என்கிற அடையாளத்தோடு மட்டுமே காட்ட வேண்டும் என அவரது மனைவி இந்து கேட்டுக்கொண்டார். தமிழ் roots கொண்ட ஒரு நடிகரை தான் முகுந்த் ஆக நடிக்க வைக்க வேண்டும் என அவர் கேட்டார். அதனால் தான் சிவகார்த்திகேயனை தேர்வு செய்தேன்.
"முகுந்தின் அப்பா மற்றும் அம்மா வைத்த கோரிக்கை.. முகுந்த் தன்னை இந்தியன் என்று தான் சொல்ல ஆசைப்படுவான். தனது சான்றிதழில் கூட எந்த வித குறியீடும் இருக்க கூடாது என விரும்புவான், அவனுக்கு இந்தியன், தமிழன் என்கிற அடையாளத்தை மட்டும் படத்தில் கொடுங்க' என முதல் முறை சந்தித்து பேசும்போதே கேட்டுக்கொண்டனர்" என இயக்குனர் தெரிவித்து இருக்கிறார்.
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri