விஜய் டிவியின் முக்கிய சீரியலில் நடிக்க வந்த Mr&Mrs சின்னத்திரை புகழ் ராஜ்மோகன்- எந்த தொடர் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சி என்றாலே முதலில் நிறைய நிகழ்ச்சிகள் அதிகமாக இருந்தது. நடனம், பாடல், காமெடி பல என நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி ஹிட்டாக ஓடியது.
இப்போதும் அப்படிபட்ட நிகழ்ச்சிகளை வெவ்வேறு பெயர்களில் புதுபுது கலைஞர்கள் இடம்பெற நடந்துகொண்டு தான் வருகிறது.
நிகழ்ச்சிகளை தாண்டி சீரியல்களிலும் இப்போது விஜய் கலக்கி வருகிறது, நல்ல வித்தியாசமான கதைகளுடன் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
அப்படி கடந்த வாரங்களாக முத்தழகு என்ற புதிய சீரியலின் புரொமோ வெளியாகி வருகிறது. தமிழ் மக்களை கவரும் வண்ணம் சீரியல் புரொமோவே விவசாய மண்ணை வைத்து வந்துள்ளது.
இந்த புதிய சீரியலின் மூலம் சின்னத்திரையில் நடிக்க வந்துள்ளார் ராஜ்மோகன், சீரியல் குழுவினரின் குடும்ப புகைப்படத்தில் அவரை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.