இதனால் தான் எந்த திறப்பு விழாவுக்கும் வருவதில்லை: ரஜினி சொன்ன காரணம்
நடிகர் ரஜினி தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியா முழுவதும் பாப்புலர் ஆன ஸ்டார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவரை நாம் பார்க்க முடியும். சமீபத்தில் அம்பானி வீட்டு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் ரஜினி கலந்துகொண்டு இருந்தார்.
அவர் வெளியில் வந்தாலே அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகும். அந்த அளவுக்கு பாப்புலர் ஆன ஸ்டாரா ஆக இருக்கும் ரஜினி எந்த விதமான திறப்பு விழாக்களுக்கும் வருவதில்லை.

இதனால் தான் வருவதில்லை
நிறுவனங்கள், கட்டிடங்கள் என எந்த விதமான திறப்பு விழாக்களுக்கும் தான் ஏன் வருவதில்லை என்ற காரணத்தை ரஜினி தற்போது கூறி இருக்கிறார்.
நான் திறந்து வைத்தால், உடனே நான் அதில் பார்ட்னர், பினாமி நிறுவனம் என சொல்லி விமர்சிக்கிறார்கள். அதனால் தான் நான் திறப்பு விழாக்களுக்கு வருவதை நிறுத்திவிட்டேன் என ரஜினி கூறி இருக்கிறார்.