பிக்பாஸில் ஜெயித்த பணத்தை வைத்து மனைவிக்கு வாங்கி கொடுத்தது என்ன?- ராஜுவே கூறிய தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையை பெற்றவர் ராஜு. இந்த தொகை மட்டும் இல்லாமல் வீடடில் 106 நாட்கள் இருந்ததற்கான தொகை என மொத்தமாக ரூ. 70 லட்சம் என கூறப்படுகிறது.
இதில் ராஜு 30% வரியை கட்ட வேண்டும் இது எல்லோருக்கும் தெரிந்தது. ராஜு இப்போது தான் சில பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
அதில் ஒரு பேட்டியில் ஜெயித்த பணத்தில் மனைவிக்கு என்ன வாங்கி கொடுத்தீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு ராஜு, என்னுடைய மனைவி தாரிகாவிற்கு இந்த மொத்த பணத்தையுமே கொடுத்துவிடுவேன், அதற்கு பிறகு என்ன பரிசு வாங்கி தருவது.
அவள் என்னிடம் எதுவும் பெரிதாக கேட்கமாட்டாள், எப்போதும் சிம்பிளாக இருப்பது தான் அவளுக்கு பிடிக்கும்.
அப்படி ஏதாவது வாங்கி தர வேண்டும் என்று நினைத்தால் மிகவும் யோசித்து தான் வாங்கி தர வேண்டும் என கூறியுள்ளார்.