ஒரு வாரத்திற்கு மட்டும் ராஜு மற்றும் பிரியங்கா வாங்கிய சம்பளம் ! இத்தனை லட்சமா..
விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகச்சியான பிக் பாஸ் சீசன் 5 கடந்த வாரம் நிறைவடைந்தது.
கடைசியாக நடந்த பைனல்ஸில் 5 போட்டியாளர்கள் இருந்தனர். இதில் ராஜு பிக் பாஸ் டைட்டிலை வென்றார்.
அவரை தொடர்ந்து பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப் உள்ளிட்ட போட்டியாளர்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.
இதனிடையே பிக் பாஸ் பட்டம் பெற்ற ராஜுவிற்கு ரூ.50 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது, இரண்டாம் பிடித்த பிரியங்காவிற்கு ரூ.30 லட்சம் தரப்பட்டது.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஒரு வாரத்திற்கு பிரியங்கா ரூ 2.5 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம். அவரை தொடர்ந்து ராஜு அதிகப்படியாக ஒரு வாரத்திற்கு ரூ 1.5 லட்சம் சம்பளமாக பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.