டைட்டில் ராஜூவுக்குத் தான்? கிட்டத்தட்ட உறுதி செய்த சம்பவம்!
பிக் பாஸ் வீட்டில் இது கடைசி வாரம் என்பதால் இதற்கு முன் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் கூட மீண்டும் வீட்டுக்குள் வந்திருக்கின்றனர். அவர்கள் சில தினங்களுக்கு பிக் பாஸ் வீட்டில் இருப்பார்கள். மேலும் தற்போது ஈரமான ரோஜாவே மற்றும் செந்தூரப்பூவே ஆகிய சீரியல் நடிகர்களும் வீட்டுக்கு வந்திருக்கின்றனர். அவர்கள் கண்ணாடி பெட்டிக்குள் இருப்பது இன்றைய இரண்டாம் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் இன்றைய மூன்றாம் ப்ரோமோவில் போட்டியாளர்கள் எல்லோருக்கும் ஒரு டாஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. மனம் கவர்ந்த போட்டியாளர் யார் என ஒரு ரோஜா பூ கொடுத்து சொல்ல வேண்டும் என கூற அதிகம் பேர் ராஜூவுக்கு தான் கொடுக்கின்றனர்.
அதனால் கண்டிப்பாக ராஜுவுக்கு தான் இந்த ஐந்தாவது சீசன் டைட்டில் கிடைக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.