பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு ராஜு செய்த முதல் காரியம்- குவியும் பாராட்டு
பிக்பாஸ் 5வது சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் முடிந்துள்ளது. இந்த சீசனின் வெற்றியாளராக ராஜு அவர்கள் தேர்வாக மக்கள் அனைவருமே கொண்டாடினார்கள்.
கதை எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவருக்கு வருங்காலத்தில் நிறைய வாய்ப்பு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ராஜுவை அடுத்து ரசிகர்கள் அனைவரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர் வந்தால் கதையில் பல மாற்றங்கள் வரும் என்கின்றனர். பிக்பாஸில் இருந்து வெளியே வந்த ராஜு என்ன செய்கிறார் என்றே இதுவரை தெரியவில்லை.
இந்த நேரத்தில் தான் அவரைப் பற்றிய ஒரு தகவல். அதுஎன்னவென்றால் பிக்பாஸில் இருந்து வெளியே வந்த ராஜு தனக்கு தெரிந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று பண உதவி செய்துள்ளாராம்.
அதோடு தனது அம்மாவிற்கு ஒரு புதிய புடவை ஒன்றை பரிசளித்துள்ளதாக கூறப்படுகிறது.