தனது மனைவியுடன் வெளிநாடு சென்றுள்ள பிக்பாஸ் ராஜு ஜெயமோகன்- எங்கே தெரியுமா?
பிக்பாஸ் 5
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சிகளில் இப்போது பிரபலமாக ஓடுவது பிக்பாஸ் தான். 6வது சீசன் பற்றி கடந்த சில நாட்களாகவே வீடியோக்கள் நிறைய வர இப்போது சூப்பர் தகவலும் வந்துவிட்டது.
அதாவது பிக்பாஸ் 6வது சீசன் வரும் அக்டோபர் 9ம் தேதி படு மாஸாக ஆரம்பமாக போகிறது, இந்த முறை இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகப்போவது யார் என்பதை பார்ப்போம்.
போட்டியாளர்கள் இவர்கள் தான் என நிறைய பெயர்கள் கூடிய ஒரு லிஸ்ட் வைரலானாலும் உண்மையில் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் பற்றி ஆரம்ப நிகழ்ச்சியில் தான் உறுதியாகும்.
ராஜு ஜெயமோகன்
கடந்த 5வது சீசனில் நமக்கு தெரிந்த பலரும் போட்டியிட்டார்கள், அதில் வெற்றிப் பெற்றது ராஜு ஜெயமோகன் தான். தற்போது அவர் விஜய் தொலைக்காட்சியிலேயே ராஜு வூட்ல பார்ட்டி என்ற ஷோ நடத்தி வருகிறார்.
இடையில் தனது மனைவியுடன் ஸ்காட்லாந்து சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.