பிக்பாஸ் பிறகு ராஜு, பிரியங்கா இணைந்து செய்யப்போகும் விஷயம்- வெளிவந்த புகைப்படம்
பிக்பாஸ் 5வது சீசனில் அனைவராலும் கொண்டாடப்பட்டவர் ராஜு. அவருக்கு மக்களும் அதிக ஓட்டுகள் போட அவரே இந்த சீசனின் வெற்றியாளராக ஆனார்.
நிகழ்ச்சி முடிந்து ராஜு தனது குரு பாக்யராஜ், இயக்குனர் நெல்சன் போன்றவர்களை விருதுடன் சென்று சந்தித்தார். பின் தனக்கு மிகவும் பிடித்தவர்களையும் ராஜு சந்தித்த வண்ணம் உள்ளார்.
அண்மையில் ராஜு விஜய்யில் ஒளிபரப்பாகும் ஸ்டாட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தது.
தற்போது என்ன தகவல் என்றால் ராஜு மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து நடனம் ஆட இருக்கிறார்களாம். பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடனம் ஆட இருப்பதாக கூறப்படுகிறது.
நடன பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ,