எலிமினேஷனுக்கு முன் அக்ஷரா சொன்ன விஷயம்.. ராஜூவே ஷாக்
பிக் பாஸ் 5ல் இருந்து இன்று இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி இருக்கின்றனர். டபுள் எலிமிநேஷன் பற்றி கமல் அறிவிப்பது இன்றைய முதல் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது வந்திருக்கும் இரண்டாம் ப்ரோமோவில் கமல் எல்லோரையும் இரண்டு இரண்டு பேராக பிரிந்து உட்கார சொல்கிறார். மக்கள் ஏன் எனக்கு ஓட்டு போட வேண்டும் என்றும், அருகில் இருப்பவருக்கு ஏன் ஓட்டு போட கூடாது என காரணம் சொல்ல வேண்டும் என கமல் கூறினார்.
அப்போது எல்லோரும் வரிசையாக காரணங்கள் கூறி வந்தனர். அக்ஷரா பேசும் போது "ராஜு அண்ணாவுக்கு ஏன் ஓட்டு போட கூடாது என சொல்ல என்னிடம் காரணம் இல்லை. அவர் வெற்றி பெற்றால் நான் கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவேன். ஆனால் எனக்கு ஓட்டு போட்டுடுங்க" என அவர் கூறி இருக்கிறார்.
இதை கேட்டு ராஜூவே சற்று ஷாக் ஆனார். 'அப்போ நானும் அந்த மாதிரியே சொல்லி இருப்பேன் சார்' என கூறி உள்ளார்.
இன்று அக்ஷரா மற்றும் வருண் எலிமினேட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. வெளியே போகும் முன் ராஜு பற்றி அக்ஷரா இப்படி கூறி இருப்பது ரசிகர்களை எமோஷ்னல் ஆக்கி இருக்கிறது.
#BiggBossTamil இல் இன்று.. #Day84 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. @ikamalhaasan #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/uc6NqwIpsU
— Vijay Television (@vijaytelevision) December 26, 2021