சுந்தரி அக்கா முதல் ஜாங்கிரி மதுமிதா வரை.. 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய குக் வித் கோமாளி 6
விஜய் டிவி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த குக் வித் கோமாளி 6ம் சீசன் இன்று தொடங்கி இருக்கிறது. அதில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் இருந்தது.
புது கோமாளிகளாக பூவையார், பிக் பாஸ் சௌதர்யா உள்ளிட்ட பலர் வந்து இருக்கின்றனர்.
போட்டியாளர்கள்
முதலில் கோமாளிகள் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் பின் போட்டியாளர்கள் யார் யார் என ஒவ்வொருவராக தொடக்க நிகழ்ச்சியில் காட்டப்பட்டனர்.
கஞ்சா கருப்பு, ஷபானா, பிரியா ராமன், ஜாங்கிரி மதுமிதா, லட்சுமி ராமகிருஷ்ணன், ராஜு ஜெயமோகன், உமர் லத்தீப், சுந்தரி அக்கா, நந்தகுமார் (கொடைக்கானல் ஐடி விவசாயி) என மொத்தம் 10 போட்டியாளர்கள் ஷோவுக்கு வந்திருக்கின்றனர்.
முதல் நாள் என்பதால் போட்டியாளர்கள் நடுவில் போட்டி எதுவும் இல்லாமல் அவர்களுக்கு பிடித்த உணவை சமைக்கலாம் என நடுவர்கள் கூறிவிட்டனர். அதனால் கோமாளிகள் உடன் அவர்கள் ஜாலியாக குக்கிங் செய்தது தான் இந்த வார ஷோவில் காட்டப்பட்டு இருக்கிறது.