பிக் பாஸ் வெச்ச ட்விஸ்ட்! திடீரென வெளியேற்றப்படும் பிரியங்கா? அதிர்ச்சி ப்ரொமோ
பிக் பாஸ் 5ன் இன்றைய மூன்றாவது ப்ரொமோ வெளிவந்து இருக்கிறது. இதற்கு முன் வந்த ப்ரோமோக்களில் பிக் பாஸ் வீட்டில் நடிக்கும் ஒரு போட்டியாளரை தேர்வு செய்து பைனலுக்கு அனுப்ப வேண்டும் என சொல்லப்பட்டது. ஆனால் அதை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் மூன்றாம் ப்ரொமோவில் பிக் பாஸ் ஒரு ட்விஸ்ட் வைக்கிறார். நீங்கள் யாரையும் தேர்வு செய்து பைனலுக்கு அனுப்பவில்லை என்றால், ஒருவரை பிக் பாஸில் இருந்து அவர்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என சொல்கிறார்.
அப்போது ராஜு வேகமாக பிரியங்காவை இழுத்துவந்து அவர் மீது தண்ணீர் ஊற்ற பார்க்கிறார். "நிஜமாக என்னை வீட்டுக்கு அனுப்புறியா" என பிரியங்கா ஷாக் ஆகி இருக்கிறார்.
#Day96 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/IM8VUg2F0e
— Vijay Television (@vijaytelevision) January 7, 2022