விஜய் டிவி ராசி அப்படி.. என்ன இப்படி அசிங்கப்படுத்துகிறார் ராஜு
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அந்த ஷோவில் குக்கிங் ஒருபக்கம் அதை விட இரண்டு மடங்கு காமெடி இன்னொரு பக்கம் என வருவதால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
CWC 3
குக் வித் கோமாளி 3ம் சீசன் சில மாதங்களுக்கு முன்பு தான் நிறைவடைந்தது. இந்நிலையில் அதில் போட்டியாளர்களாக வந்த பிரபலங்கள் தற்போது மீண்டும் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்.
ராஜு வூட்ல பார்ட்டி ஷோவுக்கு தான் அவர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். அதன் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டு இருக்கின்றனர்.
அசிங்கப்படுத்திய ராஜு
குக் வித் கோமாளியில் டாப் 4 இடங்களை பிடித்த ஸ்ருத்திகா, தர்ஷன், அம்மு அபிராமி மற்றும் கிரேஸ் கருணாஸ் மட்டும் கலந்துகொண்டனர்.
மீதம் இருப்பவர்கள் எல்லாம் எங்கே என ராஜு கேட்க, அவர்கள் வேறு பணிகளில் பிசி ஆகி விட்டதாக சொல்கிறார்கள். "விஜய் டிவி ராசி அப்படி.. வின்னர் ரன்னர் எல்லாம் சும்மா தான் இருப்பாங்க.. சும்மா வர்றவங்க பிசியாக இருப்பாங்க" என ராஜு கலாய்க்கிறார்.
என்ன இப்படி அசிங்கப்படுத்துறீங்க என கிரேஸ் கருணாஸ் கேட்டிருக்கிறார். ப்ரோமோ நீங்களே பாருங்க.