திருமணத்தை அறிவித்த ஒரே மாதத்தில் நடிகையின் கணவர் கைது! நடந்தது இதுதான்
ராக்கி சாவந்த்
ஹிந்தி நடிகை ராக்கி சாவந்த் எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். சமீபத்தில் அவர் ஹிந்தி பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார். கடந்த மாதம் அவர் தனது திருமண போட்டோவை வெளியிட்டு இருந்தார்.
ஆதில் கான் என்பவரை கடந்த 7 மாதங்களுக்கு முன்பே ரகசியமாக திருமணம் செய்து விட்டதாக கூறினார் அவர். அதன் பின் ராக்கி சவந்த்தின் அம்மா கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் உயிரிழந்தார்.

கணவர் கைது
தற்போது கணவர் ஆதில் கானுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என குற்றம்சாட்டி இருக்கும் ராக்கி சாவந்த், அவர் தன்னை domestic abuse செய்ததாக போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.
இந்த புகாரில் தற்போது போலீசார் ஆதில் கான் துராணியை கைது செய்து இருக்கின்றனர். தற்போது அவரை போலீசார் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இருக்கின்றனர்.
ஆதில் கான் வீட்டில் இருந்த நகையை திருடிவிட்டதாக ராக்கி சவந்த்தின் சகோதரர் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆர்யா தம்பி சத்யாவின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. அழகிய திருமண புகைப்படம்