ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடும் அம்மா.. திடீரென ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகை
ராக்கி சாவந்த்
ஹிந்தியில் அவ்வப்போது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருபவர் நடிகை ராக்கி சாவந்த். பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கதறி அழுது வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அவரது அம்மா Brain Tumour-ஆல் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவர் கூறி இருந்தார். பிக் பாஸ் வீட்டில் இதை பற்றி அவர்கள் என்னிடம் சொல்லவே இல்லை எனவும் கோபமாக குற்றம்சாட்டி இருந்தார்.

ரகசிய திருமணம்
இந்நிலையில் தற்போது ராக்கி சாவந்த் அவரது காதலர் ஆதில் கான் துரானி என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
அதன் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
Also Read: வாரிசு வசூல் முதல் நாளில் இத்தனை கோடி வருமா? பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு
