குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறியது ஏன்?- முதன்முறையாக கூறிய ரக்ஷன்
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியாக இப்போது இருக்கிறது குக் வித் கோமாளி.
முதல் சீசன் கொடுத்த மாபெரும் வெற்றி அடுத்தடுத்து 2, 3 சீசன்கள் வந்தன. இதில் போட்டியாளர்கள் மட்டுமே மாற்றப்பட்டார்கள், கோமாளிகள், நடுவர்கள் மற்றும் தொகுப்பாளர் எல்லோருமே முதல் சீசனில் இருந்து பயணிக்கிறார்கள்.
அப்படி இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளருக்கு தொகுப்பாளராக சில நேரங்களில் போட்டியாளர்களுக்கு உதவியாளராக கோமாளிகளுடன் கோமாளியாக என பன்முக காட்டி வந்தவர் ரக்ஷன்.
இவர் 3வது சீசனின் இறுதி நிகழ்ச்சியில் காணவில்லை, காரணம் என்ன என்பதே தெரியவில்லை.
ரக்ஷன் பதில்
இதுகுறித்து ஒரு பேட்டியில் ரக்ஷனிடம் கேட்க, அதற்கு அவர், இறுதி நிகழ்ச்சியின் போது எனக்கு கடுமையான ஜுரம், கொரோனா இருக்குமோ என்று பார்த்தால் அதுவும் இல்லை. பின் தனிப்பட்ட சில காரணங்களுக்காக என்னால் இறுதி நிகழ்ச்சியில் வர முடியவில்லை என கூறியுள்ளார்.
மீண்டும் நடிக்க வந்த நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ்- எந்த சீரியல், டிவி தெரியுமா?