நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரே மேடையில் ரக்ஷன் மற்றும் ஜாக்குலின்- என்ன நிகழ்ச்சி, வீடியோ பாருங்க
தொகுப்பாளர்கள்
விஜய் தொலைக்காட்சியில் வரும் தொகுப்பாளர்கள் அனைவருமே மக்களிடம் மிகவும் பிரபலம்.
அப்படி கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை ஒன்றாக இணைந்து தொகுத்து வழங்கியதன் மூலம் மக்களின் பேராதரவை பெற்றவர்கள் ரக்ஷன் மற்றும் ஜாக்குலின்.
இவர்கள் சில சீசன்களே தொகுத்து வழங்கினாலும் அந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே சூப்பராக இருந்தது.
குறிப்பாக ரக்ஷன் மற்றும் ஜாக்குலின் கெமிஸ்ட்ரி இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஜாக்குலின் சீரியல் நடிக்க செல்ல ரக்ஷன் மட்டுமே தொகுப்பாளராக கலக்கி வருகிறார்.
லேட்டஸ்ட் வீடியோ
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காத நிலையில் தற்போது ஒரு நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
அதோடு அவர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் செம ஆட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோவை ஜாக்குலினே தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.