குக் வித் கோமாளி நிகழ்ச்சி குட்-பை சொல்லப்போகும் தொகுப்பாளர் ரக்ஷன் ! அவரின் புதிய அவதாரம்..
விஜய் டிவி ரக்ஷன்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி முக்கிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி, ஏகபட்ட ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள இந்நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது.
மேலும் தற்போது ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 3 பைனல்ஸ் நேருங்கியுள்ளதால், விரைவில் இந்நிகழ்ச்சி முடிய இருக்கிறது.
இதற்கிடையே தற்போது குக் வித் கோமாளி பிரபலம் ஒருவரின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஆம், கடந்த மூன்று சீசன்களையும் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெயரை பெற்றவர் ரக்ஷன்.
விஜய் டிவி-ன் முக்கிய தொகுப்பாளரான இவரும் விரைவில் ஹீரோவாக இருக்கிறார். யோகேந்திரன் இயக்கத்தில் ரக்ஷன் ஹீரோவாக நடிக்கவுள்ள திரைப்படத்தில் விஷாகா திமன் என்பவர் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
மேலும் தீனாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இப்படத்தின் தொடக்க பூஜை நேற்று நடந்துள்ளது. அதன் புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.






Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
