நான் பினாமி அல்ல.. ஐடி ரெய்டு சர்ச்சைக்கு நடிகை ராகுல் ப்ரீத் காட்டமான பதிலடி

By Parthiban A Oct 05, 2026 03:47 PM GMT
Report

நடிகை ராகுல் ப்ரீத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிரபலமான நடிகை. அவரது மாமனார் Vashu Bhagnani ஒரு பிரபல தயாரிப்பாளர்.

கடந்த வாரம் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு இருந்தனர்.

நடிகை ராகுல் பிரீத் சிங் சட்ட விரோதமாக வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதாகவும், அது பற்றி விசாரிக்க தான் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது.

நான் பினாமி அல்ல.. ஐடி ரெய்டு சர்ச்சைக்கு நடிகை ராகுல் ப்ரீத் காட்டமான பதிலடி | Rakul Preet Hits Back On Benami Property News

உண்மை இல்லை

இந்நிலையில் இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என நடிகை ராகுல் ப்ரீத் காட்டமாக instagramல் பதிவிட்டு இருக்கிறார்

"எந்த செய்தியையும் உறுதி செய்யாமல் சென்சேஷன் ஆக்கி விடுகிறார்கள். இந்த வருமானவரித்துறை சோதனை என்னை பற்றிய விஷயம் அல்ல. நான் மிலிட்டரி பின்னணி கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர். சினிமா துறையில் எனக்கென காட்பாதர் யாரும் இல்லை. என்னுடைய கடின உழைப்பு மூலமாகத்தான் வந்திருக்கிறேன்.

சட்டத்தை மதித்து என்னுடைய 20 வயதிலிருந்து வரிகட்டி வருகிறேன். எந்த விதமான வெளிநாட்டு சட்ட விரோத பண பரிவர்த்தனையும் நான் செய்யவில்லை. எந்த தயாரிப்பு நிறுவனத்தின் சார்பிலும் நான் மேற்கொள்ளவில்லை. நான் யாருடைய பினாமி சொத்தையும் நம் நாட்டிலோ, வெளிநாட்டிலோ வைத்திருக்கவில்லை.

யாரும் எனக்கு Property கிப்ட் ஆக கொடுக்கவில்லை. விலை உயர்ந்த பொருட்களை நான் கிப்ட் ஆகவும் வாங்குவதில்லை என்கிற கொள்கையுடன் இருக்கிறேன்.

என்னை பற்றி தவறான செய்தி பரப்பியவர்கள் அதை திரும்ப பெற்று விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என ராகுல் ப்ரீத் தெரிவித்திருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US