ரகுல் ப்ரீத் சிங் இரண்டு முறை திருமணம் செய்துகொண்டாரா.. உண்மை இதுதான்

By Kathick Jun 20, 2023 10:30 AM GMT
Report

ரகுல் ப்ரீத் சிங்

திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். ரகுல் தமிழில் "தீரன் அதிகாரம் ஒன்று" திரைப்படத்தின் மூலம் தன்னை சிறந்த நடிகையாக அறிமுக படுத்தி கொண்டார்.

ரகுல் ப்ரீத் சிங் இரண்டு முறை திருமணம் செய்துகொண்டாரா.. உண்மை இதுதான் | Rakul Preet Singh About Her Marriage Rumors

இவர் தற்போது "இந்தியன் 2" மற்றும் "அயலான்" படத்தில் நடித்து வருகிறார். ரகுல் ப்ரீத் சிங், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தி தயாரிப்பாளரான ஜாக்கி பத்னானியை காதலிப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், இவர்களுக்கு ரகசிய திருமணம் நடைபெற்றதாக தகவல் பரவி வருகிறது.

இரண்டு திருமணமா?

இதற்கு பதிலளித்த நடிகை, "எனது திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. பிரபலங்கள் தங்கள் காதலை மறைத்து வைப்பது சுலபம் இல்லாத காரணத்தால் தான், நான் என்னுடைய காதலை முன்பே சொல்லிவிட்டேன்.

ரகுல் ப்ரீத் சிங் இரண்டு முறை திருமணம் செய்துகொண்டாரா.. உண்மை இதுதான் | Rakul Preet Singh About Her Marriage Rumors

இருப்பினும், நான் சில மாதங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்து கொண்டேன் என வதந்திகள் பரவியது. தற்போது மீண்டும் எனக்கு திருமணம் நடந்ததாக தகவல் பரவுகிறது. எனக்கு இவர்களே 2 முறை திருமணம் செய்து விட்டார்கள்" என கூறியுள்ளார்.

மேலும், தன்னைப்பற்றி புதிது புதிதாக தகவல் வந்து கொண்டே இருக்கிறது. அது எதுவும் உண்மை இல்லை என நடிகை விளக்கம் அளித்துள்ளார்.  

உடல் பருமனை குறைக்க நடிகை அனுஷ்கா ஷெட்டி செய்யும் யோகா பயிற்சி, டயட் சீக்ரெட் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US