யாரும் ஏற்று நடிக்காத போல்ட் ஆன கதாபாத்திரத்தில் நடிக்கும் ரகுல் ப்ரீத்- இதை பாருங்க
கடந்த 2009-ம் ஆண்டு கில்லி என்னும் கன்னட படம் மூலம் நடிகையாக அடியெடுத்து வைத்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
அதன்பின் மீண்டும் 2011-ம் ஆண்டு முதல் முழு நேர நடிகையாக மாறி தொடர்ந்து தெலுங்கு தமிழ் ஹிந்தி படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார்.
தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK போன்ற படங்களால் ரசிகர்களுக்கு நன்கு அறியப்படும் ரகுல் தற்போது எந்த தமிழ் படங்களிலும் நடிக்காமல் படவாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
இந்நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்தின் first look போஸ்ட்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். சத்ரிவாளி (chhatriwali) என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் ரகுல் condom tester ஆக நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதுவரை எந்த நடிகையும் இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்காத நிலையில் ரகுல் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது அவரின் போல்ட் ஆன முடிவாகவே பார்க்கப்படுகிறது.
முழுக்க முழுக்க காமெடி படமாக அமையப்போகும் இந்த படத்தை தேஜாஸ் பிரபா என்பவர் இயக்க,ரோன்னி ஸ்க்ருவால தயாரித்து வழங்குகிறார்.
Rakul Preet in #Chhatriwali
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 13, 2021
She plays the role of Condom Tester. pic.twitter.com/ce2J3K6svP