இப்படியா கேள்வி கேட்பது.. ரசிகரின் அந்த மாதிரியான கேள்வியால் கடுப்பான ரகுல் ப்ரீதி சிங்
ரகுல் ப்ரீதி சிங்
தமிழ், தெலுங்கு,ஹிந்தி மொழி படங்களில் பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகை ரகுல் ப்ரீதி சிங் . இவர் நடிப்பில் வெளியான என்னமோ எதோ மற்றும் புத்தகம் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கிடைக்கவில்லை.
அதன் பின்னர், இவர் நடித்த ஸ்பைடர் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படத்தின் மூலம் பிரபல நடிகையாக மாறினார். தற்போது கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
பதிலடி
நடிகை ரகுல் பிரீத் சிங், திரைப்பட தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரமாண்டமாக நடந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ரகுல் ப்ரீதி சிங், ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், திருமணம் பற்றிய உங்களுடைய திட்டம் என்ன? எப்போது திருமணம் என்று கேள்வி கேட்டார். இதனை கேட்டு ஆச்சரியமடைந்த ரகுல் ப்ரீதி சிங், அது முன்பே நடந்து விட்டது. என்னை எத்தனை முறை அதனை செய்ய வைப்பீர்கள்? என்று பதில் அளித்துள்ளார்.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
