வீடு முழுக்க 'அரபிக் குத்து' தான்.. பீஸ்ட் பாடல் பற்றி ராம் சரண் பேச்சு! வைரலான பேட்டி
பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அந்த அளவுக்கு மிகப்பெரிய ஹிட் ஆன அந்த பாடல் தற்போது வரை 34 கோடி பார்வைகளுக்கும் மேல் youtubeல் பெற்று இருக்கிறது.
இந்த பாடல் பற்றி தெலுங்கு ஹீரோ ராம் சரண் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ராம் சரண் பேட்டி
ஆச்சார்யா படத்தின் ப்ரோமோஷனுக்காக ராம் சரண் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் பேட்டி கொடுத்து வருகின்றனர். அதில் நடிகர் விஜய்யின் அரபிக் குத்து பற்றி பேசிய அவர் தன் வீட்டில் எங்கு சென்றாலும் அந்த பாடல் தான் ஒலிக்கும்.. கிட்சன், கார், ரூம் என எல்லா இடங்களிலும் பிளே லிஸ்டில் அது தான் இருக்கும் என தெரிவித்து உள்ளார்.
இது விஜய் ரசிகர்களை தற்போது ஈர்த்து வருகிறது.