இயக்குனர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்திற்கு இப்படியொரு நிலைமையா?... மந்தமான நிலை
கேம் சேஞ்சர்
தமிழில் பல பிரம்மாண்ட படங்களை இயக்கிய ஷங்கர் இப்போது நேரடி தெலுங்கு படம் இயக்கியுள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம் சரண் மற்றும் கியாரா அத்வானியை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை எடுத்துள்ளார்.
அண்மையில் இப்பட நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, கிட்டத்தட்ட ரூ. 400 முதல் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறியுள்ளார்.
ரசிகர்கள் கொடுக்கும் காசு ஜருகண்டி என்ற ஒரு பிரம்மாண்டமான பாடலுக்கே சரியாகிவிடுமாம். ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும் என எஸ்.ஜே. சூர்யா அசந்து போய் பேசியிருக்கிறார்.
ப்ரீ புக்கிங்
பல கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் ப்ரீ புக்கிங் சொல்லும் அளவிற்கு நடக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது வரை ப்ரீ புக்கிங்கில் வெளிநாடுகளில் படம் ரூ. 10 கோடி வரை புக்கிங் கலெக்ஷன் பெற்றுள்ளதாம்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
