தரமான வசூல் வேட்டையில் ராம் சரணின் பெத்தி திரைப்படம்.... 3 நாள் கலெக்ஷன்
பெத்தி படம்
ராம் சரண், தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு டாப் நடிகர்.
பொதுவாக முன்னணி நடிகர் படங்கள் ரிலீஸ் என்றாலே திருவிழா கோலமாக இருக்கும், அப்படி ராம் சரண் நடிப்பில் வெளியாகியுள்ள பெத்தி திரைப்படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விளையாட்டை மையப்படுத்தி அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் ஜான்வி கபூர் இடம்பெறும் காட்சிகள் ஆபாசமாக காட்டப்பட்டதாக பிரச்சனை கிளம்ப இயக்குனர் சமீபத்தில் மன்னிப்பு கேட்டிருந்தார்.

பாக்ஸ் ஆபிஸ்
நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை செய்யும் பெத்தி திரைப்படம் கடந்த ஜுன் 4ம் தேதி வெளியாகி இருந்தது. தற்போது இப்படம் 3 நாள் முடிவில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.

எம்ஜிஆர் முதல் முதலமைச்சர் விஜய் வரை.. கொல்லூர் மூகாம்பிகைக்கு வாள் காணிக்கை செலுத்துவது ஏன்? IBC Tamilnadu
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும்; சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல் IBC Tamilnadu