பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் நடிகர் ராம் சரணின் Peddi... முதல் நாள் கலெக்ஷன்
Peddi
தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகனாக ராம் சரண் நடிப்பில் கடந்த ஜுன் 4ம் தேதி வெளியான திரைப்படம் Peddi.
புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்க ஜான்வி கபூர் முதன்முறையாக அவருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர்களுடன் ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா, சிவராஜ்குமார், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஒரு கிராமத்தை பற்றியும், விளையாட்டின் மூலம் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் இசை.

பாக்ஸ் ஆபிஸ்
பெத்தி படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்க அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டுமே படம் ரூ. 35 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
தற்போது இப்படம் ரிலீஸ் ஆகி முதல் நாள் முடிவில் மொத்தமாக ரூ. 120 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri
தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu
எங்கள் நாட்டுக்கு வராதீர்கள்... சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக நாடொன்றில் வெடித்த கலவரம் News Lankasri