ஷங்கர் படத்தில் நடிப்பதற்காக ராம் சரண் வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?
ராம் சரண்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர் தான் ராம் சரண். அவரது அப்பாவை போலவே எல்லாவற்றிலும் ஒரு கலக்கு கலக்குபவர்.
இதுவரை 15 படங்களுக்கு மேல் நடித்துள்ள ராம் சரண் நிறைய ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 2007ம் ஆண்டு சிறுத்த படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து மகதீரா, நாயக், த்ருவா, புரூஸ்லீ, கைதி நம்பர் 150 என நடித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் ராம் சரண், ஜுனியர் என்டிஆர், ஆலியா பட், ஸ்ரேயா என நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் அதிரடி வசூல் வேட்டை நடத்து. 5 மொழிகளில் வெளியான இப்படம் ரூ. 1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.
புதிய படம்
நடிகர் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் புதிய படம் ஒன்று நடிக்கிறார். இப்படத்தில் கிரா அத்வானி நாயகியாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார். தற்போது என்ன தகவல் என்றால் RRR பட வெற்றியை தொடர்ந்து ராம் சரண் தனது சம்பளத்தை ரூ. 100 கோடிக்கு உயர்த்தியுள்ளதாக தகவல் ஒன்று பரவுகிறது.
பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியேறிய பின் ஜனனி போட்ட பதிவு- இதோ பாருங்க