ராஜமௌலிக்கு இப்படியொரு மிரட்டலா?- ராம் கோபால் வர்மா போட்ட டுவிட்

By Dhiviyarajan Jan 25, 2023 02:50 AM GMT
Report

இந்தியாவின் டாப் இயக்குனர்களில் ஒருவர் ராஜமௌலி. சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது.

இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியாபட், அஜய் தேவகன், ஸ்ரேயா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். கடந்த 11-ம் தேதி ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு குத்து பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது.

அப்போது அந்த விழாவில் பங்கேற்ற பிரமாண்ட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், ஆர்.ஆர்.ஆர் பட குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர் இயக்குனர் ராஜமௌலியிடம் " உங்களுடைய படம் மிக நன்றாக இருந்தது.

உங்களுக்கு Hollywoodல் படம் இயக்க ஆர்வமாக இருந்தால் அது குறித்து நாம் பேசலாம்" என்று கூறியிருந்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் ராஜமௌலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ராஜமௌலிக்கு இப்படியொரு மிரட்டலா?- ராம் கோபால் வர்மா போட்ட டுவிட் | Ram Gopal Varma Threatened Director Rajamouli

கொலை மிரட்டல்

இந்நிலையில் பிரபல இயக்குனர் ராம் கோபால்" ராஜமௌலி சார், தயவு செய்து உங்கள் பாதுகாப்பை அதிகரித்து கொள்ளுங்கள். பல இயக்குனர்கள் உங்கள் மேல் கொலை வெறியில் உள்ளனர், அதில் நானும் ஒருவன். நான் மது அருந்தி விட்டு போதையில் இருப்பதால் உண்மையை கூறிவிட்டேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.

ராம் கோபால் பல கருத்துக்களை பதிவிட்டு அதனால் சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வது வழக்கம் தான். 

துணிவு படத்தை பார்த்துவிட்டு கொள்ளை அடிக்க முயன்ற நபர்..விசாரணையில் வெளிவந்த தகவல்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US