ஜீவாவின் ராம் பட புகழ் நடிகை கஷாலாவா இது?- இப்போது ஆளே மாறிவிட்டாரே
ஜீவாவின் ராம்
தாய்-மகன் உறவு, கொலை செய்யப்படும் தாய், தனது தாயை கொன்றவனை பழிதீர்க்கும் மகன் போன்றவற்றை மையமாக கொண்டு உருவான படம் ராம்.
இந்த படம் ஜீவாவின் திரைப்பயணத்தில் ஒரு ஹிட் படமாக, முக்கிய படமாக அமைந்தது, ஜீவாவை ஒரு சிறந்த நடிகனாக அடியாளப்படுத்தியது. அதேபோல் அவரது தாயாக நடித்த நடிகை சரண்யா பொண்வண்ணனுக்கும் முக்கிய படமாக அமைந்தது.
சீட் நுனி வரை அமர்ந்து பார்க்கும் விதமாக ஒரு சிறப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையான ராம் படம் இருந்தது.
நாயகியின் லேட்டஸ்ட்
இந்த படத்தில் ஜீவாவிற்கு நாயகியாக கஷாலா என்பவர் நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்தவர் கடைசியாக 2011ம் ஆண்டு தெலுங்கில் படம் நடித்தார். அதன்பிறகு சினிமா பக்கம் இவரை காணவில்லை.
கடந்த 2016ம் ஆண்டு பைசல் ராஷா கான் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
இந்த நிலையில் நடிகை கஜாலாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாக அட ராம் பட நடிகையா இது ஆளே மாறிவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
You May Like This Video